கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் ஜெகந்நாதன் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜெகந்நாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரசாயன உரங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் நெல், கம்பு, மக்காசோளம், பருத்தி, கரும்பு, மரவள்ளி ஆகிய பயிர் செய்து வருகின்றனர்.
இப்பயிர்களுக்கு தேவையான அடிஉரம் மற்றும் மேலுரமாக இடக்கூடிய ரசாயன உரங்களான யூரியா 3,162 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,283 மெட்ரிக்டன், பொட்டாஷ் 2,443 மெட்ரிக்டன், சூப்பர் பாஸ்பேட் 975 மெட்ரிக்டன், காம்ளக்ஸ் உரங்கள் 5,402 மெட்ரிக்டன் இருப்பு உள்ளது.
மானிய விலையில்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதுமான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து வகை பயிர்களுக்கும் தேவையான நுண்ணுயிர் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலிலும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை மானிய விலையில் விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story