கடை உரிமையாளர்களுக்கு அபராதம்


கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 23 July 2021 10:40 PM IST (Updated: 23 July 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் முக கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில், சுகாதார துறை துணை இயக்குனர் ஜெயந்தி அறிவுரையின்படி, ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டியில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வம், தனபால் ஆகியோர் ஆய்வு செய்தனர். 


அப்போது முக கவசம் அணியாத 6 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.600 அபராதமாக விதிக்கப்பட்டது. பின்னர் கடை உரிமையாளர்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினர். 


Next Story