தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஊதியம் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பணியாளர்கள் போராட்டம்


தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஊதியம் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 July 2021 10:41 PM IST (Updated: 23 July 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஊதியம் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம், 

திண்டிவனம் தாலுகா ஒலக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது  சேந்தமங்கலம் ஊராட்சி. இங்கு மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் பணிபுரிந்தவர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கப்படவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள், உடனடியாக ஊதியத்தை வழங்க கோரி திண்டிவனம்- ஆவணிப்பூர் சாலையில் அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் , வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி  ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story