அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு
அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
அலங்கார மீன்வளர்ப்பு அலகு அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் செயல்பாட்டு திட்டமான பிரதான் மந்திரி மத்சய சம்பட யோஜனா (2020-2021) -ம் ஆண்டு நிலை 1-ன் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பிலான அலங்கார மீன்வளர்ப்பு அலகு அமைக்கும் திட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 1 அலகு பயனாளியின் பங்கீடு 60 சதவீதம், மத்திய அரசின் மானியம் 24 சதவீதம் மற்றும் மாநில அரசின் மானியம் 16 சதவீதம் ஆக மொத்தம் 40 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படும்.
எனவே இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மீன்வள உதவி இயக்குனர், மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம், எண்-10, முதல் தளம், நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம். 605401. தொலைபேசி எண்- 04146-259329 என்ற முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை கொடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story