கோடியக்கரையில் இருந்து திருச்சிக்கு கடத்த முயன்ற ரூ.4 லட்சம் கஞ்சா பறிமுதல்
கோடியக்கரையில் இருந்து திருச்சிக்கு கடத்த முயன்ற ரூ.4 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:
கோடியக்கரையில் இருந்து திருச்சிக்கு கடத்த முயன்ற ரூ.4 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
ரூ.4 லட்சம் கஞ்சா
நாகை மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு சாலை வழியாக கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி-வேதாரண்யம் சாலையில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையில் தனிப்படை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ேவதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இருந்து நாகையை நோக்கி வேகமாக வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த ஜீப்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான 20 கிலோ கஞ்சா இருந்தது. இதை தொடர்ந்து ஜீப்பில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள், கோடியக்கரை திருவள்ளூவர் சாலையை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ்குமார்(வயது 27), கோடியக்கரை ெரயிலடி தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ரவி(34), கோடியக்கரை மெயின் ரோட்டை சேர்ந்த மனோகர் மகன் ராஜ்மோகன்(21), அதே ஊர் மேட்டுத்தெருவை சேர்ந்த பழனிச்சாமி(40) என்பதும், இவர்கள் கோடியக்கரையில் இருந்து நாகை வழியாக திருச்சிக்கு கஞ்சாவை கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமார், ரவி, ராஜ்மோகன், பழனிச்சாமி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 20 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story