ராஜினாமா செய்யப்போவதாக ஊராட்சி உறுப்பினர்கள் மனு
வத்தலக்குண்டு ஒன்றியத்துக்குபட்ட எழுவனம்பட்டி ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் எழுவனம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 9 பேர் நேற்று, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், எழுவனம்பட்டி ஊராட்சியில் பணிகளை செயல்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாங்கள் மனு கொடுத்தோம்.
எனினும் அதுபற்றி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட திட்ட அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நாங்கள் அனைவரும் வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம், என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story