பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள்-ரூ.1 லட்சம் திருட்டு


பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள்-ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 23 July 2021 5:32 PM GMT (Updated: 2021-07-23T23:02:07+05:30)

புதுக்கோட்டையில் பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை, ஜூலை.24-
புதுக்கோட்டையில் பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை- பணம் திருட்டு
புதுக்கோட்டை நியூ டைமண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜராஜன். இவர் நேற்று தனது மனைவியுடன் மதுரையில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று ராஜராஜன் பார்த்த போது, பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த பொருட்கள் வெளியே கலைந்து கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருடு போகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து டவுன் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடுபோனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story