அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளி திருவிழா


அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளி திருவிழா
x
தினத்தந்தி 23 July 2021 11:02 PM IST (Updated: 23 July 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஆடி முதல் வெள்ளிையயொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர்

ஆடி முதல் வெள்ளி

ஆடி முதல் வெள்ளியையொட்டி திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. திருப்பத்தூர் சின்னகுளம் மாரியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் ஆடு கோழி பலியிட்டு பொங்கல் வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். திருப்பத்தூர் சின்ன குளம் மாரியம்மன் கோவிலில் ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படிருந்தது. 

இதேபோல பல்வேறு கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த புத்துகோவிலில் மிகவும் பழமை வாய்ந்த பமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆடி முதல் வெள்ளி விழா நடந்தது.  விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் புத்து கோவில் மாரியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அப்போது கொரோனா நோய் தோற்று கட்டுப்பாடுகளை பின்பற்றி முககவசங்கள் அணிந்து, சனிடைசரை பயன்படுத்தினர்.

நாட்டறம்பள்ளி

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
==========
2 காலம் படம்

Next Story