கஸ்பா அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் இடமாற்றம்
தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் இடமாற்றம்
வேலூர்
வேலூர், கஸ்பாவில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் சிலருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து அவர் விசாரணை மேற்கொண்டார். பின்னர் பள்ளி மாணவர்களின் நலன்கருதி பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி மேல்பள்ளிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளிக்கும், பட்டதாரி ஆசிரியை சாந்தி மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளிக்கும், உடற்கல்வி ஆசிரியர் குமார் கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், ஓவிய ஆசிரியை கவிதா அணைக்கட்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இடமாற்றம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story