7,844 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 24 July 2021 12:30 AM IST (Updated: 24 July 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

7,844 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கரூர்
கரூர் கஸ்தூரிபாய் தாய், சேய் நல விடுதியில் நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள பிறந்து 6 வாரம் முதல் 9 மாதம் வரையிலான குழந்தைகளை நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து பாதுகாப்பதற்காக நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், குழந்தைகளை நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து பாதுகாப்பதற்காக தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பிறந்து 6 வாரம் முதல் 9 மாதம் ஆன குழந்தைகளுக்கு மூன்று தவணைகளாக நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பிறந்து 5 வாரம் ஆன மொத்தம் 289 குழந்தைகளுக்கு முதல் தவணை நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் இந்த தடுப்பூசி செலுத்தப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் கரூர் மாவட்டத்தில் 7,844 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தனியார் நிறுவனங்களில் ரூ.4,000-க்கு செலுத்தப்படும் இந்த இத்தடுப்பூசியானது அரசின் சார்பில் விலையில்லாமல் செலுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்றார். நிகழ்ச்சியில், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முத்துச்செல்வன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சந்தோஷ், நகராட்சி நகர்நல அலுவலர் யோகானந்த், குழந்தைகள் நல மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story