மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினம்; தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை:
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி, நெல்லை தாமிரபரணி ஆற்றில் பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள்
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு நெல்லையில் 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது போலீசார் தடியடி நடத்தியதில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.
அதன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் -த.மா.கா.
காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், பழனி நாடார், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், பொருளாளர் ராஜேஷ் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், மாநில செயலாளர் ஏ.பி.சரவணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை உள்ளிட்டோர் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பா.ஜனதா-த.ம.மு.க.
பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நெல்லை மாவட்ட தலைவர் மகராஜன் தலைமையிலும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் லெனின் ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் மாநில துணை பொதுச் செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் கண்மணி மாவீரன் உள்ளிட்டோர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில், பொதுச் செயலாளர் பாலமுருகன், செயலாளர் பிரபு ஜீவன், பொருளாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் தலைமையிலும் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வியனரசு, குயிலி நாச்சியார் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நெல்லை மாவட்ட செயலாளர் வண்ணை முருகன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் தேவேந்திரன், நாம் தமிழர் கட்சி சத்யா, ஆதிதமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், தமிழர் விடுதலை களம் மாநகர ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், இந்து மக்கள் கட்சி உடையார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுபால் உள்ளிட்டோர் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தமிழ்ப்புலிகள் கட்சி தமிழரசு, திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருக்குமரன், தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் சங்க தலைவர் சின்னதுரை, செயலாளர் ஆண்டி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதேபோல் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பலத்த பாதுகாப்பு
இதையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து ஒவ்வொரு அமைப்பினரையும் தனித்தனியாக அழைத்து வந்து, அவர்கள் மரியாதை செலுத்தியதும் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச்சென்று விட்டனர்.
Related Tags :
Next Story