சிவகாசி யூனியன் கூட்டம்
சிவகாசியில் யூனியன் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் நேற்று காலை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியதலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ராமராஜ், அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. தீர்மானங்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தரும் யூனியன் தலைவருக்கும், துணைத்தலைவருக்கும், அதிகாரிகளுக்கும் ஒன்றிய கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story