சாலையில் தவற விட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்


சாலையில் தவற விட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்
x
தினத்தந்தி 24 July 2021 1:00 AM IST (Updated: 24 July 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சாலையில் தவற விட்ட செல்போனை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

நெல்லை:
நெல்லை டவுன் ராம் நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (வயது 21). கல்லூரி மாணவரான இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் டவுனில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றார். லாலா சத்திரமுக்கு பகுதியில் சென்றபோது, அவரது பையில் வைத்திருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது. ஆனால் அவர் அதனை கவனிக்காமல் வேகமாக சென்று விட்டார். இதனை அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பிரிவு போலீஸ் ஏட்டுகள் ராஜா மான்சிங், கோபால் ஆகியோர் கவனித்து, அந்த செல்போனை எடுத்தனர். பின்னர் சிறிதுநேரத்தில் ஹரிஷ் குமார் தனது செல்போனை தவறவிட்டதை அறிந்து தேடியவாறு அங்கு திரும்பி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி உறுதிபடுத்திய பின்னர் செல்போனை திரும்ப ஒப்படைத்தனர்.

Next Story