கடையநல்லூரில் முஸ்லிம் லீக் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


கடையநல்லூரில் முஸ்லிம் லீக் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 July 2021 7:49 PM GMT (Updated: 2021-07-24T01:19:37+05:30)

வக்பு வாரிய தலைவராக அப்துர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டதையொட்டி கடையநல்லூரில் முஸ்லிம் லீக் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அச்சன்புதூர்:
வக்பு வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அப்துர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். இதையொட்டி கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது, தி.மு.க. பிரமுகர் முஹம்மது அலி, யூத் லீக் மாநில துணை தலைவர் ஹபிபுல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story