சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா, பக்தர்கள் இன்றி நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலி ஆடித்தபசு திருவிழா நேற்று பக்தர்கள் இன்றி நடந்தது.
சங்கரநாராயண சுவாமி
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் யாருக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கபட்டது. அதனை தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இதுதொடர்பாக அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி ஆடித்தபசு திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர் விழாவில் 10 நாட்களாக கோமதி அம்பாள் தவக்கோலத்தில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார். இந்த நாட்களில் மண்டகப்படிதாரர்கள் மட்டும் அனுமதிக்கபட்டனர்.
தபசுக்காட்சி
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி, நேற்று மாலை நடந்தது. தவக்கோலத்தில் எழுந்தருளிய கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி 6.06 மணிக்கு நடந்தது
பின்னர் இரவில் சிவபெருமான், சங்கரலிங்கமாக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஆடித்தபசு திருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது. தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு தலைமையில் மாவட்ட சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 4 துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story