புதுப்பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை; தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
கடையநல்லூரில் புதுப்பெண்ணை கொன்ற கணவருக்கு தென்காசி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தென்காசி:
கடையநல்லூரில், புதுப்பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கூலித்தொழிலாளி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரகுமானியாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல் காதர் (வயது 35), கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தஸ்லீமா நஸ்ரின் பானு (19) என்பவருக்கும் கடந்த 17.4.2016 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி சுமார் 6 மாதங்கள் புதுமண தம்பதி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அப்போது முகமது அப்துல் காதர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக ஏற்பாடு் செய்தார்.
கொலை
இது அவரது மனைவி தஸ்லீமா நஸ்ரின் பானுக்கு பிடிக்கவில்லை. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லக்கூடாது என்று அவர் தடுத்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் கடந்த 4.11.2016 அன்று வீட்டில் இருந்த முகமது அப்துல் காதர் தனது மனைவி தஸ்லீமா நஸ்ரின் பானுவை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் காதரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு தென்காசி மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, முகமது அப்துல் காதருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னதுரை பாண்டியன் ஆஜரானார்.
Related Tags :
Next Story