சேலத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து நேற்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. நிர்வாகி மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் உதயக்குமார், நிர்வாகிகள் தியாகராஜன், வெங்கடபதி, பழனியப்பன் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ரெயில்வே, மின்சாரம், வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகம், உருக்காலை போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். போராடும் தொழிலாளர்கள் மீது அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை காட்டி மிரட்டக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தரையில் அமர்ந்து கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர், தரையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார், அவர்களிடம் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்த அனுமதி இல்லை. ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story