குமரியில் இன்று 43 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்
குமரியில் இன்று 43 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
நாகர்கோவில்:
குமரியில் இன்று 43 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
43 இடங்களில்...
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது. நேற்று மாவட்டத்தில் 65 இடங்களில் நடந்த முகாமில் மொத்தம் 10 ஆயிரத்து 861 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) 43 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைகோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்படும். இதற்கு ஆன்லைன் மூலம் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் டோக்கன் வழங்கப்படும்.
நேரடி டோக்கன்
இதுபோல் தடிக்காரன்கோணம், அருமல்லூர், ஆரல்வாய்மொழி, தோவாளை, அழகப்பபுரம், கொட்டாரம், மருங்கூர், சிங்களயர்புரி, கணபதிபுரம், வெள்ளிச்சந்தை, குருந்தன்கோடு, நடுவூர்கரை, முட்டம், குளச்சல், கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைகடை, குழித்துறை, முன்சிறை, தேங்காப்பட்டணம், ஆறுதேசம், கொல்லங்கோடு, பத்துக்காணி, மேல்புறம், களியக்காவிளை, பளுகல், கண்ணணூர், திருவட்டார், பேச்சிப்பாறை, சுருளோடு, திருவிதாங்கோடு, பள்ளியாடி, ஓலவிளை, பத்மநாபபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரடி டோக்கன் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த முகாம்களில் நீரழிவு நோய், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி போடப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story