கொரோனாவுடன் போராடிய பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன


கொரோனாவுடன் போராடிய பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன
x
தினத்தந்தி 24 July 2021 2:49 AM IST (Updated: 24 July 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுடன் போராடிய பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

சிவகங்கை,

கொரோனாவுடன் போராடிய பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

கர்ப்பிணிக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி மீனாட்சி (வயது 33). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கர்ப்பிணியான அவர் கொரோனா தொற்றுடன் கடந்த மாதம் 16-ந்தேதி சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாட்டாலும் அவதிப்பட்டு வந்தார்.
அவரது நெஞ்சு பகுதியில் சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்த போது 30 சதவீதம் நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மீனாட்சி தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இரட்டை குழந்தைகள் பிறந்தன

இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்து ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
ஆண் குழந்தை 2 கிலோ 200 கிராம் எடையுடனும், பெண் குழந்தை 2 கிலோ எடையுடனும் நலமாக உள்ளன. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக டீன் ரேவதி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மீனாட்சியின் உறவினர்கள் டீன் ரேவதி, மருத்துவ கண்காணிப்பாளர் பாலமுருகன், துணை முதல்வர் ஷர்மிளா திலகவதி, நிலைய மருத்துவ அதிகாரி முகம்மது ரபி, மகளிர் நோய் பிரிவு துறை தலைவர் காயத்ரி, குழந்தைகள் பிரிவு துறை தலைவர் குணா, பொது மருத்துவ துறைத்தலைவர் பீர் முகம்மது, மயக்கவியல் துறைத்தலைவர் வைரவராஜன் உள்ளிட்ட மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story