கொரோனா தொற்றினால் மரணமடைந்த தொழிலாளரின் குழந்தைகள் யார் யார்? விவரம் தர உதவி ஆணையர் அழைப்பு


கொரோனா தொற்றினால் மரணமடைந்த தொழிலாளரின் குழந்தைகள் யார் யார்? விவரம் தர உதவி ஆணையர் அழைப்பு
x
தினத்தந்தி 24 July 2021 7:50 AM IST (Updated: 24 July 2021 7:50 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.சி.கவுரி ஜெனிபர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருவள்ளூர், 

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், கொரோனா 2-ம் அலையில் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

பெற்றோரில் ஒருவர் அல்லது இரண்டு பேரையும் இழந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஏதுவாகவும், நலத்திட்ட உதவிகளை குழந்தைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

எனவே தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் யாரும் கொரோனா தொற்றினால் இறந்திருந்தால், அவர்களின் குழந்தைகள் பற்றிய விவரங்களை, திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்தவர்கள் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) எண் 55/88, சித்தி விநாயகர் கோவில் தெரு, பெரிய குப்பம், திருவள்ளூர் - 602001 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திலும் (போன் எண் 044-27665160);

பொன்னேரி, திருவொற்றியூர், மாதவரம், கும்மிடிப்பூண்டி தாலுகாக்களைச் சேர்ந்தவர்கள், தொழிலாளர் உதவி ஆணையர்-2 (சமூக பாதுகாப்புத் திட்டம்), எண் 61, தச்சூர் ரோடு, கிருஷ்ணாபுரம், பொன்னேரி-601204 (போன் எண் 044-27972221 மற்றும் 29570497) ஆகிய அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story