சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு


சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 24 July 2021 11:13 AM IST (Updated: 24 July 2021 11:13 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே சட்டக்கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி, 

சென்னை பாடி, டி.எம்.பி. நகர், பெரியார் 6-வது தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 20). சட்டக்கல்லூரி மாணவரான இவர், திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் தனது பெண் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

இதனால் அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவருக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முரளி, தனது நண்பர்களான சண்முகவேல், பன்னீர்செல்வம், வினோத் ஆகியோருடன் சேர்ந்து ஹரிசை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளி உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story