கால்வாயில் கொட்டப்படும் கழிவுகள்


கால்வாயில் கொட்டப்படும் கழிவுகள்
x
தினத்தந்தி 24 July 2021 5:13 PM IST (Updated: 24 July 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் அருகே பி.ஏ.பி கால்வாயில் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர வீணாகும் நிலை உள்ளது. எனனே கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிமங்கலம்
குடிமங்கலம் அருகே பி.ஏ.பி கால்வாயில் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர வீணாகும் நிலை உள்ளது. எனனே கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பி.ஏ.பி கால்வாய்
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில்  4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும்  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீர் செல்லும் நிலையில் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பி.ஏ.பி. கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடும் போது மட்டுமே அவசர கதியில் சீரமைக்கபடுகிறது. பிரதான கால்வாய், பகிர்மானகால்வாய் மடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுகிறது. கால்வாய் பகுதிகளில் சீமைகருவேல மரங்களின் வேர்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன இதனால் பல இடங்களில் கால்வாய்கள் சேதமடைந்து காணப்படுகிறது.
கண்காணிப்பு குழுக்கள்
கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடும் போது கழிவுகளால் மடைகளில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. கால்வாய்களில் கான்கிரீட் பெயர்ந்து சேதமடையும் போது சில இடங்களில் உடைப்பு ஏற்படுகிறது.கழிவுகள் அருகிலுள்ள விளைநிலங்களுக்கு செல்வதால் விளைநிலங்களும் பாதிக்கப்படுகிறது.பி.ஏ.பி. கால்வாய்களில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும். கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது



Next Story