மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
குலகேரன்பட்டினம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரன்பட்டினம்:
குலகேரன்பட்டினம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் ஆகாத விரக்தி
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள வாகைவிளையைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 34). கூலித்தொழிலாளியான இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து அமையவில்லை. இதனால் அவர் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ராஜ் தனது சகோதரர் ராஜசேகருக்கு செல்போனில் பேசி தான் விஷம் குடித்து உள்ளதாகவும் தன்னை காப்பாற்றும்படி கூறியுள்ளார்.
தற்கொலை
உடனடியாக ராஜசேகர் செட்டியாபத்து வாகைவிளை பகுதியில் வந்து பார்த்த போது, ராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story