நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார்


நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார்
x
நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார்
தினத்தந்தி 24 July 2021 8:55 PM IST (Updated: 24 July 2021 8:55 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார்

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை குறைந்த போதிலும், பரவலாக பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்று இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.

 நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட மண்சரிவை பொக்லைன் எந்திரம் மூலம் சரிசெய்தனர். இருப்பினும் சாலையோரம் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாக  இருப்பதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுதல், மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக பேரிடர் பாதிப்பை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 2 குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஊட்டிக்கு வந்தனர். 

அதில் ஒரு குழு எமரால்டு அரசு மேல்நிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளது. மற்றொரு குழு கூடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. தலா ஒரு குழுவில் 22 பேர் என மொத்தம் 44 பேர் உள்ளனர். அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தொடர் மழை காரணமாக அனுமாபுரம், முத்தோரை, மணிக்கல் ஆகிய இடங்களில் 3 வீடுகள் பகுதி சேதம் அடைந்தன. அவலாஞ்சியில் உள்ள நீரோடைகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அங்கு வனப்பகுதிகளில் ஆங்காங்கே புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளன.

 

Next Story