ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு


ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு
x
தினத்தந்தி 24 July 2021 9:11 PM IST (Updated: 24 July 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடந்தது.

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழக உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விசாகன், வேலுச்சாமி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் துறை சார்ந்த குறைகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது கோரிக்கைகள் மீது  விரைவில் தீர்வு காணப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். கொேரானா வைரஸ் பரவல் 3-வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
இந்தியாவில் பிற மாநில முதல்-அமைச்சர்களை விட தமிழக முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுவதாக தனியார் நிறுவனம் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களுக்குள்  ரேஷன்கார்டு வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் 20 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முதல்-அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதில் 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 



Next Story