பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, கோவில்பட்டியில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் நடந்த கோரிக்கை விளக்க கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து மதம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசியல் கட்சிகளை தரம் தாழ்ந்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பா.ஜ.க. சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.
அதன்படி தூத்துக்குடியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொது செயலாளர்கள் வி.எஸ்.ஆர். பிரபு, சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், மான்சிங், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார், ஓ.பி.சி. மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வாரியார், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சுபைதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
இதேபோல் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் பொதுச்செயலாளர் ஆர்.டி.பாலாஜி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சரவண கிருஷ்ணன், கிஷோர் குமார், நகர தலைவர் பாலசுப்பிரமணியன், நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் சீனிவாச ராகவன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் சென்னகேசவன், மாவட்ட மகளிரணி தலைவி லீலாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story