மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் காயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் காயம்
x
தினத்தந்தி 24 July 2021 9:59 PM IST (Updated: 24 July 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் பாலமோகன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருடன் வேலைபார்ப்பவர் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த  ராஜபாண்டி (45).
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி ரெயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது எதிரே கோவில்பட்டி நாச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான மாடசாமி  (54) கோட்டூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 3 பேரும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story