கஞ்சா விற்ற 5 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த லோக ஈஸ்வரன் (வயது 19), தாளமுத்துநகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிலுவைபட்டி சுனாமி காலனியைச் சேர்ந்த முகமது நிலாபர் (20), ஆறுமுகநேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த தேவராஜ் (19), காயல்பட்டினம் ஓடக்கரையைச் சேர்ந்த சுடலைமுத்து (36), ஏரல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து (40) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story