மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய வாலிபர் கைது + "||" + Arrested

மணல் கடத்திய வாலிபர் கைது

மணல் கடத்திய வாலிபர் கைது
மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை
குளித்தலை பெரியபாலம் காவிரி ஆற்றுப் பகுதியில் குளித்தலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணலை கடத்தி கொண்டு 2 மொபட்டில் 3 பேர் வந்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பிடிபட்ட ஒருவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரனையில் அவர் குளித்தலை கலப்புகாலனி பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 26) என்பதும், தப்பியோடியது குளித்தலை பாரதி நகர் பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் மற்றொரு தினேஷ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து, தினேஷை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மொபட் மற்றும் 6 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாகி உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம்; போக்சோவில் எலக்ட்ரீசியன் கைது
நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த எலக்ட்ரீசியனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
2. கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
3. மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது
மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
சிவகங்கையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டனர்.
5. விவசாயியை வெட்டிக் கொன்ற மகன் கைது
விருத்தாசலம் அருகே விவசாயியை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.