மாவட்ட செய்திகள்

வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் + "||" + Confiscation

வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காரைக்குடி அருகே அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்குடி,

காரைக்குடி அருகே அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

காரைக்குடி சிவில் சப்ளை தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ரேஷன் உணவுப் பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியே வந்த ஒரு வேனை நிற்குமாறு சைகை செய்தனர். ஆனால் டிரைவர் வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்.

உடனே அதிகாரிகள் ஜீப்பில் வேனை விரட்டி சென்றனர். ஜீப்பில் அதிகாரிகள் விரட்டி வருவதை பார்த்த டிரைவர் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

2 டன் ரேஷன் அரிசி

அதிகாரிகள் அந்த வேனை சோதனையிட்டபோது அதில் 2 டன் கடத்தல் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரசு உணவு பொருட்கள் கிடங்கில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த ரேஷன் அரிசி நவீன அரிசி ஆலை ஒன்றுக்கு கடத்தி செல்லப்பட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
2. கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்
காரைக்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 3 பேர் கைது
பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
5. 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
எழுமலை அருகே 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.