திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை
வெள்ளியணை அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளியணை
புதுப்பெண்
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள கே. பிச்சம்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி அரவக்குறிச்சி அருகே உள்ள வரிக்காப்பட்டி பரப்புதுரையை சேர்ந்த வரதராஜன் என்பவருடைய மகள் கவுதமி (வயது 21) என்பவருடன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகள் ஒத்தையூரில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி தனது அண்ணன் வெங்கடேஷ் குடும்பத்தினர் கோவை செல்ல வேண்டி இருந்ததால் அவர்களை பஸ் ஏற்றி விடுவதற்காக சவுந்திரராஜன் காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது கவுதமி நானும் வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு சவுந்தரராஜன் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
தற்கொலை
இதனால் கோபமடைந்த கவுதமி தனது கணவரை பயமுறுத்துவதற்காக வீட்டில் இருந்த முருங்கை மரத்துக்கு அடிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு விட்டார். இதனால் மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி விசாரணை மேற்கொண்டார்.
Related Tags :
Next Story