ஏரியூர் அருகே, ஆடு மேய்க்க சென்ற போது பாறை உருண்டு விழுந்து பள்ளி மாணவன் சாவு


ஏரியூர் அருகே, ஆடு மேய்க்க சென்ற போது  பாறை உருண்டு விழுந்து பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 24 July 2021 11:58 PM IST (Updated: 24 July 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அருகே, ஆடு மேய்க்க சென்ற போது பாறை உருண்டு விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள குருக்களையனூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், விவசாயி. இவரது மகன் மணிகண்டன் (வயது 17). இவன் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மெட்டுக்காடு என்கிற இடத்தில் மாணவன் ஆடு மேய்க்க சென்றான். அப்போது அங்குள்ள பாறை அடியில்  அமர்ந்து இருந்தபோது திடீரென பாறை உருண்டு மணிகண்டன் மீது  விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவன் சத்தம் போட்டான். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவனை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் நேற்று பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story