ஆடி மாத 2-வது சனிக்கிழமை: ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி, ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தர்மபுரி:
ஆடி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி எஸ்.வி.ரோடு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், பன்னீர், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி தாஸ ஆஞ்சநேயர் சாமி கோவில், சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் கோவில், குப்புசெட்டிப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
Related Tags :
Next Story