பழமையான மண் கலயம் கண்டெடுப்பு
சிங்கம்புணரி அருகே ஜெயங்ெகாண்ட நிலை கிராமத்தில் பழமையான மண்கலயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு அகழாய்வு மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டநிலை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி பொன்னழகு. இவருக்கு சொந்தமான இடத்தில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக தொழிலாளர்கள் பள்ளம் தோண்டி உள்ளனர்.
அப்போது சுமார் 3 அடி ஆழத்தில் தோண்டும் போது பழமையான கருப்பு நிற மண்கலயம் இருந்தது தெரிய வந்தது. அதை உடையாமல் பத்திரமாக தோண்டி எடுக்க வேண்டும் என பொன்னழகுவின் உறவினர் திருநாவுக்கரசு கூறினார். இதையடுத்து தொழிலாளர்கள் அந்த மண் கலயத்தை உடையாமல் தோண்டி எடுத்தனர்.
இதுகுறித்து தாசில்தார் திருநாவுக்கரசர் கூறும் போது, சுமார் அரை அடி உயரமுள்ள இந்த மண் கலயம் கருப்பு நிறத்தில் பழமையானதாக தெரிகிறது. இதுகுறித்து ஆய்வு நடத்த தொல்பொருள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி தொன்மையான மண் கலயம் தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரிடம் ஒப்படைக்கும் பொருட்டு சிங்கம்புணரி தாலுகா அலுவலக பதிவு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தற்போது பழமையான மண்கலயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளதால் இங்கு அகழாய்வு நடத்தினால் கீழடியை போன்று பல்வேறு வரலாற்று ஆதாரங்கள், பொருட்கள் கிடைக்கலாம் என்று வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
சிங்கம்புணரி அருகே ஜெயங்ெகாண்ட நிலை கிராமத்தில் பழமையான மண்கலயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு அகழாய்வு மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மண்கலயம் கண்டெடுப்பு
அப்போது சுமார் 3 அடி ஆழத்தில் தோண்டும் போது பழமையான கருப்பு நிற மண்கலயம் இருந்தது தெரிய வந்தது. அதை உடையாமல் பத்திரமாக தோண்டி எடுக்க வேண்டும் என பொன்னழகுவின் உறவினர் திருநாவுக்கரசு கூறினார். இதையடுத்து தொழிலாளர்கள் அந்த மண் கலயத்தை உடையாமல் தோண்டி எடுத்தனர்.
பின்னர் அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் சசிவர்ணத்துக்கு தகவல் அளித்தனர். அதனைத்தொடர்ந்து அங்கு சென்ற சசிவர்ணம், சிங்கம்புணரி தாசில்தார் திருநாவுக்கரசு ஆகியோர் பழமையான மண்கலயத்தைக் கைப்பற்றி சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து பத்திரப்படுத்தி வைத்து உள்ளனர்.
அகழாய்வு மேற்கொள்ள கோரிக்கை
தற்போது பழமையான மண்கலயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளதால் இங்கு அகழாய்வு நடத்தினால் கீழடியை போன்று பல்வேறு வரலாற்று ஆதாரங்கள், பொருட்கள் கிடைக்கலாம் என்று வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story