மேலும் 21 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,382 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,565 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 36 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 278 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 540 ஆக உயர்ந்துள்ளது. 196 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 19 பேர் சிகிச்சை மையங்களிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story