மது விற்ற 3 பேர் கைது
சிவகாசி அருேக மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் விஸ்வநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சுடுகாட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதுயை சேர்ந்த கார்த்திக் என்கிற கார்த்திக்ராஜா (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம்இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் கம்மவர்காலனி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பரமசிவம் (46) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிராஜன் விஜயலட்சுமி காலனியில் உள்ள மயானத்தின் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த முருகன் (45) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 14 மதுபாட்டில்களையும், ரூ.2,560-யும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story