நூலகங்களில் அமர்ந்து வாசகர்கள் புத்தகங்கள் படிக்க அனுமதி


நூலகங்களில் அமர்ந்து வாசகர்கள் புத்தகங்கள் படிக்க அனுமதி
x
தினத்தந்தி 25 July 2021 1:56 AM IST (Updated: 25 July 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நூலகங்களில் அமர்ந்து வாசகர்கள் புத்தகங்கள் படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட அனைத்து வகை கடைகளும் அடைக்கப்பட்டன. அந்த வகையில் மாவட்டத்தில் செயல்படும் 144 மைய நூலகங்கள் மற்றும் பகுதி நேர நூலகங்களும் மூடப்பட்டன.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருவதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியில் ஈடுபடலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து நூலகங்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு, ஊழியர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வாசகர்கள் வந்து புத்தகங்கள் படிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

சமூக இடைவெளியுடன்...

இந்த நிலையில் 24-ந் தேதி (அதாவது நேற்று) முதல் அனைத்து நூலகங்களிலும் வாசகர்கள் அமர்ந்து புத்தகம் படிக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மைய நூலகம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் நேற்று ஆர்வமுடன் வாசகர்கள் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து புத்தகங்களை ஆர்வமாக படித்துவிட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வாசகர்கள் அமர்ந்து புத்தகம் படித்தனர். 

Next Story