4 ஆண்டுகளாக செயல்படாத சுங்கச்சாவடி பயன்பாட்டிற்கு வந்தது


4 ஆண்டுகளாக செயல்படாத சுங்கச்சாவடி பயன்பாட்டிற்கு வந்தது
x
தினத்தந்தி 25 July 2021 2:47 AM IST (Updated: 25 July 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே 4 ஆண்டுகளாக செயல்படாத சுங்கச்சாவடி பயன்பாட்டிற்கு வந்தது.

குன்னம்:
பெரம்பலூர் 4 ரோட்டில் இருந்து பேரளி, குன்னம், அரியலூர், பளுவூர், திருவையாறு, தஞ்சாவூர், கந்தர்வகோட்டை, பெருங்களூர், புதுக்கோட்டை, கீழசெவல்பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை வரை 212 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தை அடுத்த பேரளி கிராமம் அருகே, அந்த வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் கட்டணம் வசூல் செய்ய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.
அந்த சுங்கச்சாவடி நிலப்பிரச்சினை காரணமாகவும், வழக்குகள் காரணமாகவும் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் கட்டணமின்றி சென்று வந்தன. இந்நிலையில் நேற்று அந்த சுங்கச்சாவடி பயன்பாட்டிற்கு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. முன் அறிவிப்பு இன்றி சுங்கச்சாவடி செயல்படுத்தப்பட்டு, கட்டணம் வசூல் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் திணறினர்.

Next Story