மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது + "||" + Youth arrested under Pokcho Act

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
போத்தனூர்

கோவை வெள்ளலூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் நேதாஜி (வயது 19). இவருக்கும் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் நேதாஜி, ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் வெள்ளலூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், குழந்தைகள் உதவி மையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலின் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் நேதாஜி, சிறுமியை திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேதாஜியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
கரூரில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. சிறுமியிடம் சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
3. சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5. பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.