கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தல்; 2 வாலிபர்கள் கைது


கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தல்; 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 25 July 2021 6:56 AM IST (Updated: 25 July 2021 6:56 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இவ்வழியாக சென்னை மாதவரம் நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சை நேற்று போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற ஆந்திர மாநிலம் கூடூரைச் சேர்ந்த சாய் (வயது 22), நெல்லூரைச் சேர்ந்த கணேசன் (25) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் 1 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களுடன நின்று கொண்டிருந்த சென்னை மண்ணடியை சேர்ந்த வாலிபர் சதீஷ் (21) என்பவர் மீது கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story