மதுராந்தகம் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணின் காலை பிடித்து இழுத்ததால் தகராறு; தொழிலாளி கைது
மதுராந்தகம் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணின் காலை பிடித்து இழுத்ததால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காவாதூர் ஊராட்சியில் வசிதது வந்த 30 வயது பெண் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி புருஷோத்தமன் (38) அங்கு தூங்கி கொண்டிருந்த அந்த பெண்ணின் காலை பிடித்து இழுத்தாக தெரிகிறது. அவர் இது குறித்து அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் புருஷோத்தமன் தாக்கியதில் அவரது கணவர் மயக்கம் அடைந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த புருஷோத்தமன் ஆம்புன்சுக்கு தகவல் தெரிவித்தவர் மற்றும் அவரது தாயை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து சித்தாமூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்து செய்யூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story