திருச்சி மத்திய சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி விஷம் குடித்து தற்கொலை
திருச்சி மத்திய சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சமயபுரம்,
திருச்சி மத்திய சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆயுள் தண்டனை கைதி
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள கீழவங்காரம் கீழத்தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 72). கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த திருப்பதி(59) என்பவரை இடத்தகராறு காரணமாக கொலை செய்த வழக்கில் துரைராஜை சிறுகனூர் போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு திருச்சி செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து அவா் திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
பரோலில் வந்தவர் தற்கொலை
சிறையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கைதிகளுக்கு ஜாமீன் வழங்கவும், தண்டனை கைதிகளை பரோலில் அனுப்பவும் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி, ஆயுள்தண்டனை கைதியான துரைராஜ் கடந்த 3 மாதங்களுக்கு முன் பரோலில் வீட்டுக்கு வந்தார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துரைராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
காரணம் என்ன?
பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, துரைராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story