அச்சரப்பாக்கம் அருகே சோழர் கால சிலை கண்டெடுப்பு
அச்சரப்பாக்கம் அருகே சோழர் கால மூதேவி சிலை கண்டெடுக்கப்பட்டது.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே அனந்தமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வயல் நடுவில் ஒரு மரத்தடியில் சாய்ந்த நிலையில் ஒரு கல் சிலையை திருவாதூர் அரசு மேல் நிலைப்பள்ளி உதவி் தலைமையாசிரியரும் கவிஞருமான செ.ப.தமிழரசன் கண்டெடுத்தார்.
இது குறித்து அவர் பேசும்போது:-
நான் இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக செல்லும்போது தற்செயலாக அந்த பழங்கால சிலையை கண்டேன். அது 3 அடி உயரமும் 2 அடி அகலமும் உள்ள ஒரு பலகை கல் மீது காணப்பட்டது. அந்த சிலையை உற்று நோக்கியபோது, வலது கையில் ஒரு மலர்ந்த தாமரை மலரை ஏந்தியபடியும் இடது கை தனது வயிற்றுக்கு கீழே வைத்தபடி காணப்பட்டது என்றார்.
இது குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை கண்காணிப்பாளரும் நூலாசிரியருமான முனைவர் வசந்தியிடம் கேட்டபோது:-
இந்த சிலை சோழர் காலத்தை சேர்ந்தது. ஜேஷ்டாதேவி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் முன்னோர்கள் இந்த தேவியை தினமும் வழிபட்டு வந்தனர்.
மூத்த தேவி என்று கூறப்படும் இந்த தமிழ் தெய்வம் காலப்போக்கில் மூதேவி என்றாகிவிட்டது.
11-ம் நூற்றாண்டு அல்லது 12-ம் நூற்றாண்டை சேர்ந்தது எனவும் சாதாரணமாக இதுபோன்ற அமைப்பில் காணப்படும் பெண் சிலையின் இருபுறமும் அவரது மகன் (மாந்தர்), மகள் (மாந்தி) எனக் கூறப்படும் உருவங்களுடன், காக்கை கொடியை் கையில் பிடித்தபடி காணப்படும். ஆனால் இந்தச் சிலையில் அவை காணப்படவில்லை.
இது போன்ற பழங்கால சின்னங்கள் பொதுமக்களால் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story