திருவொற்றியூரில் பா.ஜ.க. சாலை மறியல்
திருவொற்றியூரில் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18-ந் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை பேசினார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இந்தநிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து திருவொற்றியூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், பொது செயலாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் வன்னியராஜன், சாந்தகுமார், செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.
Related Tags :
Next Story