திருவொற்றியூரில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்டதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை


திருவொற்றியூரில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்டதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 25 July 2021 10:07 AM IST (Updated: 25 July 2021 10:07 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்டதை தட்டிக்கேட்ட வாலிபரை அடித்து உதைத்த 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் தாங்கல், பி.பி.டி. சாலையைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 21). புகைப்பட கலைஞரான இவர், நேற்று காலை எண்ணூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

எண்ணூர் விரைவு சாலையில் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் வந்தபோது, லோகேசின் கழுத்தில் காற்றாடி மாஞ்சா நூல் சுற்றியது. உடனே சுதாரித்துக்கொண்ட அவர், மோட்டார் சைக்கிளை நிறுத்தி, மாஞ்சா நூலை கையில் பிடித்து விட்டார்.

அப்போது சிறுவர்கள் உள்பட 15 பேர் கொண்ட கும்பல் அவரை சூழ்ந்து கொண்டு மாஞ்சா நூல் காற்றாடியை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அதற்கு லோகேஷ், கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்தால் யார் பொறுப்பு? என தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 15 பேர் கொண்ட கும்பல், லோகேசை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த காற்றாடி மாஞ்சா நூலை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த லோகேஷ், அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story