தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது


தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 25 July 2021 5:03 PM IST (Updated: 25 July 2021 5:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள உமரிக் கோட்டையை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மகன் மனோ (வயது 24). இவர் தூத்துக்குடி 3-வது மைல் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு ரோந்து வந்த தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கஞ்சா விற்பனை செய்ததாக மனோவை கைது செய்தார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story