வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்
வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்
வால்பாறை
வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் நடைமுறை இருந்து வருவதாலும் சுற்றுலா தலங்களில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாலூம் வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கி விட்டனர்.
குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவில் வரத்தொடங்கும் சுற்றுலா பயணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் திரும்பிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு நகர் பகுதியில் இடமேயில்லை.
இதனால் வால்பாறை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் இது போன்ற நிலை ஏற்பட்டு அவசர தேவைகளுக்கு உள்ளூர் வாசிகள் எங்கும் செல்ல முடிவதில்லை.
இந்த நிலையில் வால்பாறை நகர் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சிக்கி செல்ல முடியாமல் தவித்தது.
இந்த வாகனம் மீண்டு செல்வதற்குள் மிகவும் சிரமப்பட்டது. போலீசார் இல்லாததால் பொது மக்களே போக்குவரத்தை சரி செய்து வாகனங்களை ஒழுங்குபடுத்தி 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி உண்டாக்கி அனுப்பி வைத்தனர். இது குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறியதாவது்-
வால்பாறை பகுதியை பொறுத்தவரை சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். .போக்குவரத்து நெரிசல் காரணமாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி சிரமத்தை சந்தித்து வருகிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story