சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்
நாகையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.ேமலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிப்பாளையம்:
நாகையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.ேமலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கோரி சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசின் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 8 படகுகளில் சுருக்குமடி வலைகளை ஏற்றிக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு விரைந்து வந்து அரசிடம் இருந்து எவ்விதமான பதிலும் வரவில்லை. எனவே சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி இல்லை என கூறி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் நிலை இருந்தது.
போலீஸ் குவிப்பு
இதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் பின்னர் உதவி கலெக்டர் மணிவேல், தாசில்தார் ஜெயபாலன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கு இடையே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முயன்றனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையின் போது சுருக்குமடி வலைகளை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும், 5 ஆயிரம் மீனவர்கள் மறைமுகமாகவும் உள்ளதால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர். அதற்கு இன்னும் 2 நாட்களுக்குள் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதனால் நம்பியார் நகர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் கரை திரும்பினர். தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story