மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல்


மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல்
x

வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட 4 கிலோ  கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக  2 பேரை  கைது செய்தனர்.
4 கிலோ கஞ்சா
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கடல்வழியாக கஞ்சா, மஞ்சள், தங்கம் உள்ளிட்டவைகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்படுகிறது. இதை தடுக்க கடலோர காவல் படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையும் மீறி அடிக்கடி கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வேதாரண்யத்தில் நாகை சாலையில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 4 கிலோ கஞ்சா இருந்தது.
2 பேர் கைது
இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கோடியக்காட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அய்யப்பன் (வயது27), வேதாரண்யத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் அருண் (28) என்பதும், இவர்கள் கோடியக்கரையில் இருந்து விற்பனைக்காக கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பன், அருண் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

Next Story