குடியிருப்புக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


குடியிருப்புக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
குடியிருப்புக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
தினத்தந்தி 25 July 2021 8:52 PM IST (Updated: 25 July 2021 8:52 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறை


வால்பாறை பகுதியில் இருந்து கோடைகாலம் தொடங்கியவுடன் கேரள வனப்பகுதிகளுக்கு சென்ற யானைகள் தென்மேற்கு பருவழை தொடங்கியதால் மீண்டும் வால்பாறை வனப்பகுதிகளை நோக்கி வரத்தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் கேரள வனப்பகுதியை ஒட்டிய வாகமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த இரண்டு காட்டுயானைகள் தொழிலாளர்களின் வீட்டின் கதவு,ஜன்னலை உடைத்து அட்டகாசம் செய்தன. 

அங்குள்ள ஒரு வீட்டு ஜன்னலை உடைத்த 2 யானைகள், துதிக்கையை உள்ளே விட்டு பொருட்களை எடுக்க தொடங்கியது. இதை பார்த்த தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு யானைகளை விரட்டினர்.

2 யானைகளும் தொழிலாளர்கள் விரட்டியதும் வனப் பகுதிக்குள் செல்வதும், மீண்டும் வருவதுமாக இருந்துள்ளது. யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டது என்றிருந்த நிலையில் நள்ளிரவில் அங்குள்ள குடியிருப்புக்குள் யானைகள் மீண்டும் புகுந்தது. பழனியம்மாள், கருப்பசாமி, சுடர்மணி, மணிவேல், கலியபெருமாள், முகிலன், சரவணன் ஆகியோரது வீடுகளின் கதவு,ஜன்னலை உடைத்தது.

 அந்த வீடுகளில் சாப்பிடுவதற்கு ஏதும் கிடைக்காத கோபத்தில் வீட்டுக்குள்ளிருந்த பொருட்கள் முழுவதையும் வெளியே எடுத்து வீசியெறிந்து சேதப்படுத்தியது.

இதனையடுத்து மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து விட்டு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு 2 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Next Story